உறுமுகிறது ஹெல உறுமய
பௌத்த பிக்குகள் உட்பட மதகுருமார்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடைசெய்யும் தனி நபர் முன்மொழிவு ஒன்றை ஐ.தே.க. உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பௌத்த பிக்குமார்களின் அடிப்படை உரிமையை, ஜனநாயக உரிமையை, மனித உரிமையை மறுக்கும் இந்த தனி நபர் முன் மொழிவு அவரின் கட்சியின் தலைவர் உட்பட அனைத்து முக்கியத்தர்களின் அனுமதியின் பேரிலா முன்வைக்கப்பட்டது என்பதை ஐ.தே.க. தெளிவு படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது.
இது பௌத்த விரோத புலிப் பயங்கரவாதிகள், வெளிநாட்டு அமைப்புகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான செய்யப்படுள்ள ஒப்பந்தமா என்ற சந்தேகம் எழுகின்றது. விஜேதாச ராஜபக்ஷவின் பாவமான இந்த முன்மொழிவு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி வகை கூற வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய உறுமியுள்ளது.
0 comments :
Post a Comment