எலிசபத் மகாரணியாரின் வைர விழாவிற்கு ஏற்பாட்டுக்குழுவினரின் விசேட அழைப்பை ஏற்று பிரித்தானியா வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதில் சிறப்பம்சம் யாதெனில் புலிகள் ஜனாதிபதி எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்தபோது அவருக்கு ஆதரவாக ஏராளமான இலங்கையர்கள் அங்கு குவிந்து தமது ஆதரவை வெளிக்காட்டியுள்ளனர். பாறையின் ஒருமருங்கே புலிகளும் மறு மருங்கே இலங்கையர்களும் கோஷமிட்டு நின்றபோது எவ்வித சலனமுமின்றி அவ்விடத்திற்கு விரைந்த ஜனாதிபதி தனக்கு எதிராக கோஷமெழுப்பிரோரைப் பார்த்து கையசைத்து சைகைகாட்டிச் சென்றுள்ளார்.
தனக்கு ஆதரவைத் தெரிவித்து நின்றோருடன் சகஜமாக பேசிக்கொண்டு நிற்பதையும் பிரித்தானிய பொலிஸார் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்குவதையும் படங்கள் இங்கு தெளிவாக விளக்குகின்றது.
No comments:
Post a Comment