நாளை முறிகண்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டம் எனும் கூத்துக்கு நீதிமன்று தடைஉத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தினை அனுமதிக்க முடியாது என பொலிஸார் நீதிமன்றில் மனுச்சமர்பித்து அதற்கான தடை உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது இதுவரை தெரியவரவில்லை. ஆனால் நாளை ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகும்போது பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அங்கு கூடுகின்றவர்களிடம் கையளித்து கலைந்து செல்லச்சொல்வர். அதை மீறும்பட்டத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்த குற்றத்திற்திற்காக நீதியின் முன் நிறுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment