கனடாவிலுள்ள இரண்டு வழிபாட்டு சமயஸ்தலங்கள், புலிகளியக்கத்திற்கு நேரடியாக நிதி உதவி வழங்கிய தகவல்களை, கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு வழிபாட்டு ஸ்தலங்களும், சுனாமிக்கு உதவி திரட்டும் போர்வையில், சேகரித்த பெருந்திரளான அமெரிக்க டொலர் நிதியை, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளதாக, கனடா வருமான முகவர் நிலையம் தெரிவித்துள்ளது
. தமிழர் புனர்வாழ்வு அமைப்பினூடாக, எல.;ரி.ரி.ஈ பயங்கரவாத அமைப்புக்கு இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமயஸ்தலங்களாக கனடாவில் பதியப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள், எல.ரி.ரி.ஈ பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, டொரன்டோ அறிக்கைகள் தெரிவிக்கின்றன
. இதில் ஒரு நிறுவனம், 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், எல.;ரி.ரி.ஈ இயக்கத்திற்கு ஒரு லட்சத்து 18 ஆயிரம் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது. மற்றைய நிறுவனம், இக்காலப்பகுதிக்குள் 85 ஆயிரம் அமெரிக்க டொலரை அவ்வியக்கத்திற்கு வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment