சுற்றாடல் தொடர்பான சிறந்த அறிவை இலங்கை கொண்டுள்ளது - அதிகார சபையின் தலைவர்
ஆசிய நாடுகளுக்கு மத்தியில் சுற்றாடல் தொடர்பான சிறந்த அறிவை இலங்கை கொண்டிருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
முறையான சுற்றாடல் முகாமைத்துவத்தை மேற்கொள்ள இலங்கையால் முடிந்துள்ளது. நிலையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் சுற்றாடல் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
சுற்றாடல் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க ஊடகங்களுக்கு பொறுப்புக்கள் காணப்படுவதாக பேராசிரியர் சந்திரசிறி ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு தொடர்பாக விளக்குவது அவசியமாகும். கிராமப் பகுதி மக்களுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்க வானொலி ஊடகங்களுக்கு கூடுதலான பணியை நிறைவேற்ற முடியுமென்று அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றாடலை நேசிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்பும் பொறுப்பு மக்களிடம் காணப்படுவதாக சிரேஷ்ட விரிவுரையாளர் மனோஜ் புஷ்பகுமார தெரிவித்தார்.
0 comments :
Post a Comment