நடனமாடுவதிலும் இலகுவானது கிரிக்கட் ஆடுவது – சனத் ஜயசூரியா.
நான் நடனம், நடிப்பை இரசிப்பவன். ஆனால், நடன சிற்பி அல்லன். அதுதான் பிரச்சினை. இதற்கு முன்பு ஒருபோதுமே, மேடையில் ஆடிய தில்லை. கிரிக்கட் விளையாடுவது நடனமாடுவதை விட மிக இலகு வானது. எனினும் நான் இப்போது நடனம் பயில்கின்றேன். கூடிய மட்டும் திறமைகாட்ட முயல்கின்றேன் என்று முன்னாள் கிரிக்கட் வீர்ரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சனத் ஜயசூரியா கூறியிருக்கின்றார்.
தற்போது இந்தியாவில் நடைபெறும் ஜலக் டிக்லா ஜா என்னும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜயசூரியா எதிர் வரும் 16 ம் திகதி மாதுரி தீக்ஷித், கரன் பொகார், ரெபோ டி சோப்ரா போன்ற பிரபல நடுவர்கள் முன்னிலையில் நடனப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
0 comments :
Post a Comment