சந்தேகத்தால், மனைவியின் உதட்டை கடித்து தின்ற பேராசிரியர்
மனைவி மீது கொண்ட சந்தேகத்தால், அவரது உதட்டை கடித்துத் தின்ற சம்பவம் தொடர்பாக அவரின் கணவரை, சுவீடன் பொலீசார் கைது செய்துள்ளனர் சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தில், துணை பேராசிரியராக பணிபுரிந்துவரும் சந்தேக நபர் தன் முதல் மனைவியை, சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டு, இளம்பெண் ஒருவரை, கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.
தன் இளம்மனைவிக்கு, மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்ட பேராசிரியர், அவரது உதட்டை கடித்துத் தின்று விட்டார் இதனால், படுகாயமடைந்த இவரின் மனைவி, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவியின் அழகை குலைக்க வேண்டும் என்ற நோக்கில், உதட்டை கடித்துத் தின்றுள்ளதாக, பேராசிரியர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உதட்டை கடித்துத் துப்பாமல், எதற்காக அவர் தின்றார் என்பது தெரியவில்லை. தற்போது, மன நல மருத்துவர்கள், இவரது குணாதிசயங்கள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment