வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று வடக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமையை இல்லாமல் செய்தார். அது போலவே இன்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அந்த மக்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது என்று 28 ம் திகதி நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் நடாத்திய ஊடக மாநாட்டில் எதிர்கட்சித தலைவர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்தார்.
அத்துடன் அன்று புலிகள் வடக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமையை சூறையாடியிருக்கா விட்டால் தானே இன்று ஜனாதிபதியாக இருந்திருப்பேன் என்று கூறிய அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொது மக்களுக்கு வாக்களித்தபடி வடக்கின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment