டெங்கு நோயை ஒழிப்பதற்கு சுதேச வைத்திய துறை அமைச்சின் திட்டம்
டெங்கு நோயை ஒழிப்பதற்கு சுதேச வைத்திய துறை அமைச்சு 4 வருட திட்டம் ஒன்றை வகுத்துள்ளதுடன், இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சுதேச வைத்திய துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் தொடர்பாக மக்கள் அவதானம் செலுத்தும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாவும், இதன் முதல்கட்ட பணிகள் எதிர்வரும் சனிக்கிழமையன்று பொரலை ஆயுர்வேத போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதியமைச்சர் பண்டு பண்டாரநாயக்கவின் தலைமையில் சுதேச வைத்திய துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது. மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற ஆயுர்வேத ஆணையாளர்கள், அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்தகொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment