இலங்கையின் முதலாவது ஆயுள்வேத தாதியர் குழுவுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு
இலங்கையின் முதலாவது ஆயுள்வேத தாதியர் குழுவொன்று நேற்று தமது நியமனக் கடிதங்களை தேசிய வைத்திய அமைச்சில் அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
மஹரகம - நாவின்னவில் அமைந்துள்ள தேசிய வைத்தியம் தொடர்பான தேசிய நிலையத்தில் 18 மாத பயிற்சிகளையும்,கந்தான தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகால பயிற்சிகளையும் முடித்துக் கொண்டோருக்கே இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
நாடெங்கும் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் இவர்கள் கடமையாற்றவுள்ளனர்.
0 comments :
Post a Comment