Friday, June 29, 2012

பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு மோசமான பாலியல் சித்திரவதை - எகிப்தில் சம்பவம்

எகிப்தின் தாஹீர் சதுக்கத்தில் வைத்து பெண் ஊடகவியலாளர் ஒருவர் மோசமான பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகியதாக குறித்த பெண் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளரான 21 வயதான நடாஸா ஸ்மித் என்பவரே என்ற இவ்வாறு சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார்.

எகிப்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அது தொடர்பான செய்தி சேகரிப்புக்காக நடாஸா தாஹீர் சதுக்கத்திற்கு சென்றிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாவும், குறித்த சம்பவத்தின் போது அங்கு திரண்டிருந்த ஆண்கள் சிலரால் தான் நிர்வாணமாக்கப்பட்டதுடன், பாலியல் ரீதியான சீண்டல்களுக்கும் ஆளானதாகவும். அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடன் வந்த ஆண்களின் உதவியுடன் அருகில் அமைந்திருந்த மருத்துவ முகாமொன்றினுள் தஞ்சமடைந்ததுடன், அங்கிருந்த பெண்கள் தனக்கு "புர்கா" ஆடையை வழங்கியதாகவும், அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

இதனை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாதெனவும் நடாஸா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முதல் எகிப்தில் அமெரிக்க சி.பி.எஸ் ஊடக நிறுவனத்தின் பெண் ஊடகவியலாளரான லாரா லோகன் எகிப்தில் ஹொஸ்னி முபாரக் பதவி விலகிய அன்று இரவு கும்பலொன்றினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.

முபாரக் பதவி விலகிய அன்று இரவு எகிப்திய தாரிர் சதுக்கத்தில் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க அவ்விடத்திற்கு சென்றிருந்த வேளையில், அவ்விடத்தில் திரண்ட சுமார் 200 பேர் கொண்ட குழுவினாலேயே இவர் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment