Thursday, June 28, 2012

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து வடபகுதி மீனவர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார் !

இலங்கையின் வடபகுதி கடற்பகுதியில் இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து மாபெரும் பணிப்புறக்கணிப்பு ஒன்றில் ஈடுபட வுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்பகுதிக்குள்ளாக தொடர்ந்தும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த இவர்கள் இவற்றை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மீனவர்களால் தாம் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நிற்பதோடு தமது குடும்பங்களும் பட்டினியால் சாகவேண்டிய நிலை விரைவில் ஏற்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டமானது அடுத்த மாத முற்பகுதியில் இடம்பெறவுள்ளது. இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் குடும்பங்கள் பங்கு கொள்ளும் கூட்டமைப்பின் தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.இதேவேளை அண்மையில் ஜ.நா வின் மாநாடென்றில் உரையாற்றி ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இலங்கை கடற்பகுதிக்குள்ளாக ஊடுருவும் இந்திய மீனவர்களுக்கு எதிராக சர்வதேச கடற்ச்சட்டம் பாயும் என எச்சரித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com