பத்தரமுல்லையிலுள்ள இலங்கை வங்கியை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு.
"கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலி"
பத்தரமுல்லை செத்சிறிபாய எதிரிலுள்ள இலங்கை வங்கியை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டும். மற்றொரு சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது, இன்று அதிகாலை 2.30 மணிக்கு பத்தரமுல்லையிலுள்ள இலங்கை வங்கியை கொள்ளையிடுவதற்கு 3 பேர் கொண்ட குழுவொன்று முச்சக்கர வண்டியொன்றில் வருகை தந்து குறித்த முச்சக்கர வண்டியை வங்கியின் அருகில் நிறுத்தி வைத்துள்ளனர். இதன்போது அவ்வழியால் பயணம் செய்த மற்றொரு முச்சக்கர வண்டியொன்றில் சென்றவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது சந்தேகித்து, அவ்வண்டியை அவதானித்துள்ளனர். அப்போது ஒருவர் வண்டியினுள் இருக்க, ஏனைய இருவர் வங்கிக்குள் இருப்பதை கண்டுள்ளனர். அதன் பின் மற்றய முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் இவர்களை பிடித்துள்ளனார்.
பின்பு அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக அழைத்துச் சென்ற போ,து அவ்வழியால் ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸாரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் பிடிபட்ட சந்தேக நபர்களுடன் வங்கியை நோக்கி மீண்டும் வருகை தந்தபோது, குறித்த வங்கிக்குள் இருந்த மற்றொரு நபரினால் பொலிஸார் மீது கைக்குண்டொன்று வீசப்பட்டடுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வடபகுதி இராணுவ முகாம் ஒன்றில் பணிபுரியும் இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் தலைமையில்
இடம்பெற்று வருகின்றது.
இதே வேளை கடுவலை, மாவட்ட நீதிமன்ற மஜிஸ்திரேட் பிரேங் குணவர்தனவினால் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment