Monday, June 11, 2012

ஊகடங்கள் மக்களை ஈர்பதற்கு தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது. கோத்தபாய

நாட்டில் பாரியளவில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மக்களை ஈர்க்கும் நோக்கில் ஊடகங்களால் தவறான வழியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் குற்றச் செயல்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர் குற்றச் செயல்கள் அதிகரிக்கப்படவில்லை என்பது காவல்துறை புள்ளி விபரத் தரவுகளின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளனவா என்பது குறித்து காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனால் பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் குற்றச் செயல்களில் எண்ணிக்கையில் பாரியளவு பாரிய வீழ்சி ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குற்றச் செயல்கள் இடம்பெறும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயுத பயன்பாடு போன்ற விடயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com