Monday, June 11, 2012

களவாக இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர்களை கைது செய்ய திட்டம்

இந்தியாவினூடாக அவுஸ்திரேலியா விற்கு இலங்கையர்களை அழைத்து செல்லும் மோசடி தொடர்பாக இந்திய புலனாய்வு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து இந்தியா முழுவதிலும் விசேட தேடுதல்கள் இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அகதிகள் என்ற போர்வையில் இந்தியா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்தே இன்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமேஸ்வரம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களை அழைத்து சென்று, அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்லப்படுவதாகவும், இதற்கு புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ யினரின் ஆதரவு கிடைத்து வருவதாகவும், இந்திய புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் 30 இலங்கையர்களை ஏற்றிச்சென்ற படகொன்று, நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவிற்கும் இடையே, அவுஸ்திரேலிய கடல் எல்லையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகமொன்றில் தடுத்து வைக்கப்பட்டு, இன்றைய தினம் அவர்கள் பிறிதொரு இடத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உட்பட அவர்களை அடையாளம் காணும் சோதனைகளும் இடம்பெறுவதாக, அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலிய கடல் எல்லையில் நேற்றிரவு பிரவேசித்த 3வது படகிலேயே, இலங்கையர்கள் வந்துள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. Australia has plenty of land and a strong preachers of democracy and sympathizers.In God's name Why not
    they admit the poor migrants of 3rd world countries.

    ReplyDelete