உலகளாவிய ரீதியில் ரொய்டர்ஸ் . இப்சோஸ் வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளிலிருந்து பெரும்பாலான மக்கள் தமது கையடக்க தொலைபேசிகளை விட கணனிகள் மற்றும் உடலுறவின் மீது அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
25 நாடுகளைச் சேர்ந்த 19271 வயது வந்தவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து மேற்படியான முடிவு கண்டறியப்பட்டுள்ளது.
உடலுறவையும் கையடக்க தொலைபேசிகளையும் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 80 வீதமானவர்கள்,தாம் கையடக்க தொலைபேசிகள் இன்றி கூட வாழ்ந்துவிடுவோம், ஆனால் உடலுறவின்றி வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாது எனும் வகையில் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர்.
கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளிடையே அதிகளவான தெரிவை கணனிகளும், சமூக வலையமைப்பு இணையத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மத்தியில் சுமார் 58 வீதமானவர்களின் தெரிவு தொலைக்காட்சிகளாகவும் அமைந்திருந்தன.
சமூக இணையத்தளங்களின் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகளவு காணப்படுவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment