சூரியன், வெள்ளி, பூமி, ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு இன்று அவதானிப்பு
சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை, ஒரே நேர் கோட்டில் வரும் அபூர்வ நிகழ்வு இன்று காலை நிகழ்ந்துள்ளது. இந்த அபூர்வ காட்சியை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் இந்த காட்சியை வெறும் கண்களால் பார்த்தால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் வெள்ளிக் கோள் இடைமறிப்பு என்பது மிகவும் அரிதான ஒன்று. இப்பாதை பூமிவலம்வரும் தளத்தினை ஜூன் முதல் வாரத்தில் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே இது போன்ற இடைமறிப்பு நடக்கும்.
இது குறித்து தநாசா விஞ்ஞானி டீன் பெஸ்நெல் கூறுகையில் இதுபோன்ற அரிய நிகழ்வு வருகின்ற 2117-ம் ஆண்டில் நிகழலாம் என தெரிவித்தள்ளார்.
0 comments :
Post a Comment