Sunday, June 3, 2012

அரந்தலா பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளினால் அரந்தலா பிக்குகள் படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அந்தப் பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படுகொலையை நினைவுகூர்ந்து நேற்றைய தினம் பல விசேட சமய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதன்போதே குறித்த பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு அந்நாள் புலிகளின் கிழக்குத் தளபதி கருணா அம்மான் தலைமையேற்றிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுக்களை முழுமையாக அவர் மறுத்திருந்தார். கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது பிரதியமைச்சர் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment