அதிவேக பாதையின் அருகிலுள்ள வைத்திய சாலைகளில் திடீர் விபத்து பிரிவுகள் ஆரம்பம்
அதிவேக பாதையில் விபத்துக்குட் படுவோரின் நலன் கருதி அதிவேக பாதையினருகிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் திடீர் விபத்து பிரிவுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள அனைத்து அதிவேக பாதைகளுக்கு அருகிலும் இது போன்று வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சு, இன் நிர்மண பணிகளுக்கு சுகாதார அமைச்சு 45 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
களுத்துறை, வேதர, எல்பிட்டிய, மற்றும் பலபிட்டிய வைத்தியசாலையில் குறித்த திடீர் விபத்து பிரிவுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் எல்பிட்டிய, பலபிட்டிய மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் திடீர் சிகிச்சை பிரிவுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment