ஜுலியன் அசாஞ்ஜ் எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார்
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ஜ் லண்டனில் உள்ள எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். மக்களுக்கு மறைக்கப்படும் அமரிக்கா உட்பட உலக நாடுகளின் அதிகாரமட்டத் தகவல்களை வெளியிடும் தகவல் துறைப் புரட்சியின் முன்னோடியான அசாஞ்ஜை எதிர்கொள்ள முடியாத ஏகபோகங்கள் அவர்மீது போலியான பாலியல் குற்றச்சாட்டுக்களை முவைத்தன. இதன் அடிப்படையில் சுவீடன் நாட்டிற்கு நாடுகடத்தப்படுவதற்காக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். சுவீடன் ஊடாக அமரிக்காவிற்கு நாடுகடத்தி அங்கு அவருக்கு மரண தண்டனை வழங்குவதே எதிராளிகளின் நோக்கம் என அஞ்சும் அசாஞ்ஜ் இன் அரசியல் தஞ்சம் குறித்து ஆராய்வதாக எக்கொவாடோரியன் தூதரகம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment