மட்டு சிறுவர் பாதுகாப்பு நிலையத்தை பொறுப்பேற்றது அரசாங்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 10 ஆண்டுகளாக அரச சார்பற்ற எஸ்.கோ தொண்டர் நிறுவனத்தினால் பராமரிக் கப்பட்டு வந்த சிறுவர் பாதுகாப்பு இடைத்தங்கல் நிலையம் அரசாங்கத் தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு சிறுவர் துஷ்பிரயோக கங்களினால் பாதிக்கப்படும் சிறுவர்களை, நீதிமன்ற கட்டளைக்கு அமைய ஆற்றுப்படுத்தும் நிலையமாக இந்நிலையம் மட்டக்களப்பு நகரில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியில் செயல்பட்டு வந்ததது.
இந்நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சால்ஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை திணைக்கள பணிப்பாளர் எம்.முபாரக், அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.திருத்தியோகனிடமிருந்து உத்தியோகபூர்வ ஆவணங்களையும் உடைகளையும் பெற்றுக் கொண்டார்.
0 comments :
Post a Comment