Monday, June 18, 2012

ஈழம்வாதிகளை திருப்திப்படுத்த மாவட்டங்களில் இருந்து படையினரை வாபஸ்பெற முடியாது.

யாழ்ப்பாணத்தில் பாரியளவு படைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர்

யாழ்ப்பாணக் குடா நாட்டிலும், தீவுப் பகுதியிலும் பெருந் தொகையான படையினர் இருக்கிறார்கள் . இது தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கிறது என்பவர்கள் இனி அப்படி பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று ஐலண்ட் நாளிதழுக்கு கூறினார் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. போரின் உச்ச கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 40000 படையினர் இருந்தனர். தற்போதைய யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க யாழ் கட்டளைத் தளபதியாக 2009 திசம்பரில் பதவி பொறுப்பேற்கும் போது அங்கு 27000 படையினர் இருந்தனர் தற்போது அது 15600 என்று குறைந்துள்ளது. உண்மையில் அனுராதபுர மாவட்டத்தில்தான் தற்போது அதிக படையின்ர் உள்ளனர் என்றார் கோட்டாபய.

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், உயர்பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாகக் கைவிடும் செயற்பாடு 2011 அக்டோபரில் ஆரம்பமாகியது. தற்போது பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய பகுதி மட்டுமே உயர்பாதுகாப்பு வலயமாக உள்ளது.
ஈழம்வாதிகளையோ வேறெவரையுமோ திருப்பதிப் படுத்த எந்த மாவட்டத்திலிருந்தும் முற்றாக படையினரை மீளப்பெற முடியாது. படையினரை தேவையான இடத்தில் வைத்திருப்பாது அரசாங்கத்தின் சிறப்பிரிமை என்றார் பாதுகாப்புச் செயலாளர். ...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com