இரட்டைக் குடியுரிமை வழங்க இறுக்கமான நடைமுறை.
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள இலங்கை மக்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது கடுமையான புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா கூறினார். இதன்படி அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட முன்பு ஐந்து ஆண்டுகள் இங்கு வசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்தக் காலப்பகுதிக்குள் இரண்டு தவணையில் ரூபா 2 இலட்சம் சேவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் மற்ற நாட்டில் எவ்வாறு குடியுரிமை பெற்றார்கள் என்ற விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த விபரங்கள், குறிப்பிட்ட நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்களால் உறுதிப்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை இதற்கான அனுமதியை அளித்துவிட்டது என்றும் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment