ஜனாதிபதியின் பிரித்தானிய – வத்திக்கான் விஜயங்கள் இலங்கையின் நற்பெயரை உறுதிப்படுத்த உதவியதாக ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பி லிருந்து இயங்கும் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சியொன்றில் அவர் கருத்துகளை வெளியிட்டார்.
பிரித்தானிய விஜயத்தின் போது அரச தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் ஜனாதிபதி இலங்கையின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தினார்.
பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றவிருந்த விசேட உரை பின்னர் ரத்துச் செய்யப்பட்டது. இது தொடர்பாக சில ஊடகங்கள் தவறான பிரசாரங்கனை முன்னெடுத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
எல்ரிரிஈ ஆதரவாளர்கள் மாநாட்டின் ஆரம்பத்திலிருந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள். இதனால், சேர் அலன் கொலின் உரையை ரத்துச் செய்ய தீர்மானித்தார்.
ஜனாதிபதிக்கும், பிரித்தானிய பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிறந்த முறையில் இடம்பெற்றது. பிரித்தானிய பிரதமரை ஜனாதிபதியால் சந்திக்க முடியவில்லையென்று சில ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை ஜனாதிபதியின் செயலாளர் முற்றாக நிராகரித்தார்.
உரை ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ஜனாதிபதியிடம் கவலை வெளியிட்டார். ஜனநாயகத்தின் தாயகமாகக் காணப்படும் நாட்டில் கருத்து வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்காதமை தொடர்பில் தாம் கவலையடைவதாக ஜனாதிபதி பிரித்தானிய பிரதமரிடம் கூறினார்.
வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததென ஜனாதிபதியின் செயலாளர் கூறினார். பாப்பரசருடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த கிடைத்ததோடு, ஜனாதிபதி இலங்கையின் உண்மை நிலைவரம் பற்றியும் அவருக்கு விளக்கமளித்தார்.
கத்தோலிக்கர்கள் வசிக்கும் நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற இது வாய்ப்பாக அமைந்தது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment