அறிவை மையமாகக் கொண்ட கல்வி முறைமையுள்ள ஆசியாவின் முக்கிய நிலையமாக இலங்கை மாறியுள்ளதென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி தலையிட்டு செயற்படுகின்றார்.
இந்நாட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுள் ஊவா பல்கலைக்கழகத்தில் மட்டுமே ஆர்ப்பாட்டங்களோ வேலைநிறுத்தங்களோ நடைபெறுவதில்லை.
அங்கு பகிடிவதை இல்லை. மாணவர்களின் அரசியல் அமைப்புக்கள் கூட அங்கு இல்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.
தெற்காசியாவில் அதியுயர் கல்வி மட்டத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
யுனெஸ்கோ நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் தமது பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டுமென அவர் கூறினார்.
தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிலர் பல்கலைக்கழகத்தை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களை நடத்திச் செல்வதற்கென திறைசேரி ஆண்டுதோறும் 21 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதில் ஒன்பது பில்லியன் ரூபா சம்பளம் வழங்குவது உட்பட ஏனைய
கொடுப்பனவுகளுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment