Wednesday, June 6, 2012

பல்வேறு சட்டக் கோவைகள் பற்றி நேற்று பாராளுமன்றத்தில் விவாதம்

சுங்கம், வரி, போதைப் பொருட்கள் என்பவை தொடர்பான பல்வேறு சட்ட கோவைகள் பற்றி நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்ட கோவைகளை சமர்ப்பித்து சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரை நிகழ்த்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனவும்,.வான உதிரிப்பாகங்கள் இறக்குமதியும் அதிகரித்துள்ளதாகவும், வரிகளை மீளவும் திருத்தியமைத்தமைக்கு இதுவே காரணம் என அவர் கூறினார்.

இருப்பினும் உழவு இயந்திரம் போன்ற விவசாய இயந்திர வகைகளுக்கான வரி அதிகரிக்கப்படவில்லை எனவும் , மோட்டார் வாகன இறக்குமதிக்காக கடந்த ஆண்டு செலவிடப்பட்ட தொகை பதினேழாயிரத்து 329 கோடி ரூபாவெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மேலும் தொடருமானால், அதன் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தாம் பின்னிற்கப் போவதில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளித்த அமைச்சர் குமார வெல்கம ரயில் பாதைகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகக் கூறினார்.

இந்திய நிதி உதவியின் கீழ் 2010 ல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கென ஏழு கோடியே 80 லட்சம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com