அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் நாயை உயிரோடு சாப்பிட்ட மைக்கல் டெர்ரன் டேனியல்(22) என்ற நபரொருவரை கைது செய்துள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தெரியவருவதாவது குறித்த நபர் போதைப் பொருளை உட்கொண்டுவிட்டு பக்கத்துவீட்டுகாரரின் நாயைப் பிடித்து அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். அதன் பின்பு கடித்து அதன் உடம்பில் உள்ள சதையை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
அதையடுத்து குறித்த நபர் இரத்தக்கறையுடன் அமர்திருந்தவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, உடனே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், டேனியலைக் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கடந்த மே மாதம் மியாமியில் ரூடி யூஜின் என்பவர் போதைப் பொருள் உட்கொண்டுவிட்டு தெருவோரம் வசிக்கும் நபர் ஒருவரின் முகத்தைக் கடித்துச் சாப்பிட்டதையடுத்து குறித்த நபரை பெலிஸார் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment