வென்னப்புவ மற்றும் நீர்கொழும்புப் பிரதேசங்களில் திருடியதாக கூறப்படும் ஒன்பது மோட்டார் சைக்கில்களை புத்தளம் மற்றும் ஜாஎல பிரதேசங்களுக்கு விற்பனை செய்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பு, வென்னப்புவ பிரதேசங்களில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு மற்றும் கடற்கரைக்கு வருகை தந்தோர்கள் மோட்டார் சைக்கிலை நிறுத்தி வைத்துவிட்டுச் செல்வதை அதானித்திருந்து, அதன் ஹென்டல் பூட்டை உடைத்து எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனி நபர் ஒருவரின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பன்னலப் பொலிஸ் பிரிவில் மாகந்துரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை தொடர்ச்சியாக விசாரணை நடத்திய போது, இந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்த மோட்டார் சைக்கில்கள் ஜாஎல, புத்தளம் பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட இடங்களில் சைக்கில்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு குளியாப்பிடிய மஜிஸ்ட்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment