முல்லைத்தீவு பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் மக்கள் பவானைக்காக திறந்து வைப்பு
20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் மக்கள் பவானைக்காக திறந்து வைக்கப்பட்டள்ளது. அத்துடன் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி பணிகள் சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களின், நிதியுதவியில் இடம்பெற்று வருகின்றது.
70 மில்லியன் ரூபா செலவில் நவீன சத்திரசிகிச்சை கூட கட்டிடத் தொகுதியும், 35 மில்லியன் ரூபா செலவில் வைத்தியர்களின் ஓய்வு விடுதியும், 25 மில்லியன் ரூபா செலவில் வோட் தொகுதி ஆகியன இங்குநிர்மாணிக்கப்படவுள்ளன. மொத்தம் 130 மில்லியன் ரூபா செலவில் இப்புனர்நிர்மாண பணிகள் இடம்பெறவுள்ளதாவு,ம் வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்ப்படுகின்றது.
அமைச்சர்களான சி.பி ரத்னாயக்க, றிஷாட் பதியூதின், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் டாக்டர் பாலித்த மஹிபால உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment