கடந்த 3ம் திகதி நைஜீரியாவின் அபுஜா நகரில் இருந்து புறப்பட்ட "டானா ஏர்லைன்ஸ்" விமானம், லாகோஸ் நகரை நோக்கிச் சென்ற போது, ஏ.ஜி.ஜி., என்ற இடத்தில் மூன்றடுக்கு குடியிருப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த, 153 பேர் பலியாகியதுடன், கட்டடம் நொறுங்கி கட்டிடத்தில் இருந்த 40 பேர் பலியாகினர்.
இந்த விபத்தின் எதிரொலியாக "டானா ஏர்லைன்ஸ்" இந்த விமான நிறுவனத்தின் உரிமத்தை, நைஜீரிய விமான போக்குவரத்துத் துறை தற்காலிகமாக இரத்து செய்துள்ளதுடன், இந்த விபத்தில் இறந்தவர்களுக்காக, நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனாதன், மூன்று நாள் துக்கதினமாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment