கடந்த வாரம் இடபெற்ற சந்திப்பொன்றில் பேசிய பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் 40க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள பட்டதாரிகள் ஆசிரியர் வேலைக்குப் பொருத்தமற்றவர்கள் என்றும் வேலை அனுபவம் அற்றவர்களெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்தே பட்ட்தாரிகள் கொதித்தெழுந்துள்ளனர்.
பிள்ளையானின் மேற்படி கூற்றுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள பட்டதாரிகள் பிள்ளையானுடன் நேருக்கு நேர் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டுள்ளனர் என நேஷன் பத்திரிகை தெரிவிக்கின்றது.
தமது திறமைகளை மதிப்பீடு செய்தபின்னரே பல்கலைக்கழகங்கள் தமக்குப் பட்டங்களை வழங்கியதாக பிள்ளையானிடம் தெரிவித்த பட்டதாரிகள் தங்களது கல்வித்தகமை என்னவோ எனக்கேட்டபோது பிள்ளையான கையை பிசைந்ததாக அறியமுடிகின்றது.
தம்மைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்பதிலிருந்து முதலமைச்சர் சந்திரகாந்தன் தவிர்த்துக் கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துள்ள இப்பட்டதாரிகள் தமது திறமைகளைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சரின் கல்வித் தகமைகள் பற்றியும் கேள்வியெழுப்பியமை மாணவர்களின் கீழ்படியாமையையும் அவர் மக்களின் பிரதிநிதி என்பதை ஏற்க மறுக்கின்றனர் என்பதையும் உணர்த்துகின்றது.
கிழக்குமாகாணசபைத் தேர்தல்கள் வெகு விரைவில் நடைபெறக்கூடும் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், மேற்படி உரசல் தேர்தலில் அவரைத் தூரத் தள்ளிவைக்கும் நிலைக்கு இட்டுச் செல்லுமா என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 'பழைய குருடி கதவைத் திறடி' என முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையில் பிள்ளையானின் கருத்துக்களை பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் நோக்குகின்றனர்.
No comments:
Post a Comment