'அரசாங்கமும் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலும்” - கருத்தரங்கு
'அரசாங்கமும் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலும் ' என்ற தொனிப் பொருளில் நாளை புதன் கிழமை கொழும்பு -7 இல் அமைந்துள்ள தேசிய நூலக சேவை கேட்போர் கூடத்தில் விஸேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
சுதந்திரத்திற்கான அரங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுவுள்ளது.
இந்நிகழ்வில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, கலாநிதி நிமல்கா பெர்னாந்து, சட்டத்தரணிகளான சுதர்சன குணவர்தன, ஜே.சி.வெலியமுள்ள, மனித உரிமை ஆர்வலர் பிரிட்டோ பெர்னாந்து ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வில் விஸேட கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
0 comments :
Post a Comment