Sunday, June 3, 2012

தலைமைத்துவ பயிற்சியின் பின் பகிடிவதைகள் அதிகரித்துள்ளனவாம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவ பயிற்சியின் பின்னர் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் நோக்கங்களே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் தொடர்பிலும் மனித உரிமைகள் தொடர்பிலும் கதைக்கும் அரசியல் கட்சிகள், தமது மாணவ ஒன்றியங்களின் ஊடாக பகிடிவதைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பகிடிவதைகள் அவர்களுக்கு மாத்திரமின்றி அவர்களது குடும்பங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களை பாதுகாப்பதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comments :

Anonymous ,  June 3, 2012 at 9:53 PM  

University education is the higher academic qualification one can achieve in his or her life.They are the people highly respected by the society and once they come out they hold higher position in the public
but it is shameful to see the behaviour of these guys inside the universities.
Do they have any psychological problems? why not the universities check their mental balance before they give admissions to their unviersities

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com