நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் புலனாய்வு பிரிவினரால் விசாரணை
அரசியல் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்ந்து புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பிரிதானியாவிலிருந்து இலங்கையர்கள் 36 பேர் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடுதிரும்பியவர்களை புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment