அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பம்
அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் வாகன வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தக நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, துறைமுகத்தில் வாகனங்களை ஏற்றிய முதலாவது கப்பல் இன்று காலை 9 மணியளவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment