கோயிலை அகற்றி புத்தர்சிலை நிறுவ நடவடிக்கை எடுத்தமைக்கு இந்து மாமன்றம் கண்டனம்
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதி யிலுள்ள பிள்ளையார் கோயிலை அகற்றி புத்தர் சிலை அமைப்பதற்கு இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றம் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பிள்ளையார் கோயிலை அகற்றி புத்தர் சிலை அமைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால் 15 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment