வடக்கு கிழக்கு தமிழரின் பாரம்பரிய வாழ்விடமல்ல என்று கூறி சிங்களவர்களை அங்கு வலோற்காரமாக குடியேற்றுவதற்கு வண. எல்லாவளை மேத்தானந்தா முயற்சிக்கின்றார் இது தேசிய அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும் எனவும் வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை சான்றுகளுடன் நிரூபிப்போம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.ம. உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்று கூற தமிழருக்கு உரிமையில்லை என்று வண. மேத்தானந்தா வெளியிட்ட கருத்து, வரலாறு சம்பந்தமான அவரது அறிவீனத்தையும், அவர் வரலாற்றைத் திரிபுபடுத்துவதையும் காட்டுகின்றது என்று பா.உ. வண. மேத்தானந்தா வெளியிட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவித்தபோதே மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment