ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவர் இளவரசர் ஷேக் அஹமட் பாட் அல் ஸபான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கை, ஆசிய ஒலிம்பிக், மற்றும் குவைட் ஒலிம்பிக் பேரவைக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்புவதே இவ்விஜயத்தின் நோக்கமாகும்.
1991 ஆம் ஆண்டு முதல், ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் இளவரசர் அல் ஸபான், குவைட்டின் தகவல் மற்றும் எண்ணெய் வள அமைச்சராக செயற்பட்டுள்ளதுடன், ஆசிய விளையாட்டு பேரவை மற்றும் ஆசிய கைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளஅவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியை நடாத்தும் பொறுப்பை, இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment