டமில் “ஷக்தி”க்கு சிங்களத்தின் மீதொரு “பக்தி”.
தமிழுக்கு சக்தி என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் இலங்கையின் ஒரு மின்னூடக நிறுவனம் ஆண்டு தோறும் நடன மற்றும் பாடல் போட்டிகளை நடாத்தி பாடல் மற்றும் நடன அரசர்களையும், அரசிகளையும் மற்றும் சிற்றரசர் சிற்றரசிகளையும் (அதன் மொழியில் Super Star ) தெரிவு செய்து வருகின்றது. இதில் அந்த நிறுவனம் எப்படியாவது சிங்கள பாடல் மற்றும் நடனத்துக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை வழங்கிவிட பகிரதப் பிரயத்தனம் செய்வது வழமை. அத்துடன் எந்த விததிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலந்து கொள்பவர்கள் முதலிடத்தைப் பெற்றுவிடக் கூடாது என்பதிலும் கண்ணுங் கருத்துமாக இருக்கும். இதற்கு அது வாக்களிப்பு என்ற மாய வித்தையெல்லாம் நடாத்தும் SMS செய்யும் ஒவ்வொருவரும் முறையே பாடல் மற்றும் நடனத் துறையில் நுன்புலமை பெற்றவர்கள் என்ற நினைப்பில். ஆனால், இன்றை வரைக்கும் நடந்த போட்டிகளில் SMS மூலம் ஒவ்வொரு போட்டியாளரும் எவ்வளவு SMS வாக்குகள் பெற்றார் என்று யாருக்குமே தெரியாது. எண்ணிக்கை முடிவு அறிவிக்காத வாக்கெடுப்பு.
நேற்று இரத்மலானையில் உள்ள ஸ்டைன் கலையகத்தில் SAKTHI SUPER DANCER (தமிழின் சக்திக்கு இதற்கு தமிழில் என்ன அர்த்தம் என்று தெரியாது) இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த காலத்திலிருந்தே ஏகபோக நடுவர்களாக இருந்த இரண்டு தமிழ் நடன ஆசிரியைகளே இன்றும் நடுவர்களாக இருந்தனர். நேற்று ஏனோ SMS வாக்கெடுப்பு இடம் பெறவில்லை. நேற்றய போட்டியில் இரண்டு தமிழ் இணைகளும் (ஜோடி) இரண்டு சிங்கள இணைகளும் கலந்து கொண்டன. முதலாம் மூன்றாம் இடங்கள் சிங்களவருக்கும் இரண்டாம் நான்காம் இடங்கள் தமிழருக்கும் கிடைத்தன. நடுவர்ளாகக் கடமையாற்றிய இரு தமிழ் நடுவர்களும் எந்தளவுக்கு சிங்கள நடனக் கலையில் துறைபோனவர்களோ தெரியாது.
சிலவேளை இவர்’கள் இருவருக்கும் மிக விரையில் சிங்கள நடனத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவி கிடைக்கலாம்.
நேற்றய போட்டி தமிழில் நடைபெற்ற ஒரு சிங்கள நிகழ்ச்சியாகவே இருந்தது. உதிரி நடனங்கள் யாவும், இரண்டொரு தமிழர் நடனங்களைத் தவிர 90 % சிங்கள நடனமயமாவே இருந்தன. எந்த அளவுக்குத் தழிழ் நடனமணிகள் உடைகளை அதிகரித்து உடம்பை மறைத்தார்களா, அந்த அளவுக்கு சிங்கள் நடனமணிகள் உடைகளைக் குறைத்து உடம்பைக் காட்டினார்கள். இதுதான் சிறப்பு.
அகில இலங்கை தமிழ் எம்பி, மின்னலாய் வந்து தமிழருக்கு சக்தி அளிப்பவர் இந்த தமிழழிவு நிகழ்ச்சியை இரசித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க பரிதாமாக இருந்தது.
ஒரு சிறிய சந்தேகம். தமிழ் ஊடகம் நடாத்தும் தமிழர்களுக்கான போட்டிகளில் ஏன் சிங்கள போட்டியாளர்களையும் சிங்கள நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்?. இந்த ஊடகத்தின் இணையான சிங்கள ஊடகம் தனது போட்டிகளில் இவ்வாறு தமிழ் போட்டியாளர்களையும் தமிழ் நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொள்கின்றதா ?
சமத்துவம் என்பது அடிமைத்தனமல்ல.
தமிழ்நேசன்
0 comments :
Post a Comment