சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபித்தன் பின்னர் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்க பொது எதிர்கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போத அஇந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இயலுமானால் சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபித்து அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் சவால் விடுத்ததோடு, ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது அதனைச் சார்ந்த ஏனைய கட்சிகளோ தேர்தல்கள் தொடர்பில் அச்சத்துடன் செயற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த தருணத்திலும் எவ்வாறான சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்ததோடு, அரசாங்கம் தம்மை தக்க வைத்துக் கொள்வதற்காகவே தேர்தல்களை பின்தள்ளி வருவதாக ஜயலத் ஜயவர்தன குற்றம்சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment