மரக்கறி மற்றும் பழ வகைகளை ஏற்றிச் செல்லும் போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தை இன்று முதல் மீண்டும் செயற் படுத்துவதற்கு கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மரக்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துச் செல்லும் போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தாத வர்த்தகர்கள் மீது இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது 30 வீதமானவை விரயமாவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிலாஸ்டிக் கூடைகள் பயன்படுத்தும் நடைமுறை இவ்வருட ஆரம்ப பகுதிகளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment