தற்போது பூந்தல மற்றும் பேலியகொட ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுவரும் புதிய உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பமாகுமென மீன்பிடி கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
நாளொன்றுக்கு பத்தாயிரம் ரின்மீன்கள் இவற்றின் மூலம் உற்பத்தி செய்ய எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரண்டு தொழிற்சாலைகளிலும் நூற்றுக்கும் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுமென மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மஹில் சேனாரட்ன தெரிவித்தார்.
காலியில் உள்ள ரின்மீன் தொழிற்சாலையில் தற்போது நாளொன்றுக்கு எட்டாயிரம் ரின்மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதை நாளொன்றுக்கு பத்தாயிரம் ரின்களாக உயர்த்துவது குறிக்கோள் எனவும் அவர் கூறினார்.
தேசிய ரின்மீன்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கேள்விகள் கோரப்பட்டுள்ளதாகவும் ஆனால், தேசிய தேவைகளை நிறைவு செய்யும் வரை ரின்மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாளொன்றுக்கு இரண்டு லட்சம் ரின்மீன்கள் தேசிய தேவையாக உள்ளது. தற்போது நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக சந்தையில் கிடைக்கும் மீன்களின் அளவிலும் பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது. அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் அது மீண்டும் வழமைக்கு திரும்பிவிடும் எனவும் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.
No comments:
Post a Comment