கள்ளத்தனமாக அவுஸ்திரேலியா சென்றால் கடல்தான் புகலிடம் -அவுஸ்திரேலிய பத்திரிகை
அவுஸ்திரேலிய கரைக்கு அருகில் சென்றதும் அவுஸ்திரேலியாவில் புகலி டமும், குடியுரிமையும், பெற்றுத் தரப்படும் என்று தென்னிந்தியாவில் இருக்கும் இலங்கையர்களை ஆசை காட்டி அழைத்துச் செல்லும் மனித வியாபாரிகள், அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது ஆழ்கடல் மரணமே என்று சிட்னி மோர்னிங் ஹெலால்ட் என்ற அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் இவ்வாறு தென்னிந்திய கரையில் இருந்து சென்ற இரண்டு படகுகளில் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளனர் என, புகலிடம் கோருவோரின் நலனைக் கவனிக்கும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்கு இவ்வாறு புகலிடம் கோரிப் போகக் கூடாது என்று, அந்த மக்களுக்கு விளக்குமாறும், புலிட வசதிகள் அங்கு வழங்கப்படுதில்லையென்றும், மெல்போர்ன் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிளாட்ஸ்டோன் எக்செவியர் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment