Sunday, June 3, 2012

பயங்கரவாதிகள் குழப்பநிலையை ஏற்படுத்திய வேளை இலங்கை மக்கள் பொறுமைகாத்தனர்

பயங்கரவாதிகள் இனங்களிடையே குழப்பநிலையை ஏற்படுத்தும் நோக்கில் புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பங்களில் இலங்கை மக்கள் பொறுமையுடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பேங்கொங்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் உலக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண புத்தபெருமானின் வழிகாட்டலை அரச தலைவர்கள் பின்பற்றுவார்களாயின், அவரின் வழிகாட்டல் நிச்சயம் வெற்றியளிக்கும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததுடன், புத்தசாசன மேம்பாட்டிற்காக தாங்லாந்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வரலாற்று சிறப்புமிக்க பொறுப்புக்களையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

தாய்லாந்தில் உலகின் 58 நாடுகளைச் சேர்ந்த மகாசங்கத்தினர் உட்பட சுமார் இரண்டாயிரத்து 500 பேர் பங்குபற்றிய 2600ஆவது சம்புத்தத்வ ஜயந்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது ஆண்டு வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment