தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருந்த இலங்கை அகதிகள் 150 க்கு மேற்பட்டோர் கடந்த இரண்டு வாரங்களில் காணாமல் போயுள்ளனர் என்று வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், சமீபத்தில் இந்திய கடலில் ஏற்பட்ட தென்மேல் பருவக் காற்று சூறாவளி காரணமாக பலர் முகாம்களை விட்டு கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு செல்லத் முற்பட்டிருந்தனர் எனவும், இதன் காரணமாக இந்த காணாமல் போதல் இடம் பெற்றிருக்கலாம் என்வும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டு அகதி முகாம்களிலிருந்து நூற்றுக் கணக்கானோர் இவ்வாறு காணாமல் போயிருப்பதாக கொல்லம் பொலிசார் தெரிவிக்கின்றனர். அவ்வாறு கடந்த இரு வாரங்களுக்குள் அகதிகளை ஏற்றிக் கொண்டு படகொன்று சென்றுள்ளது என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும், கொல்லம் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
No comments:
Post a Comment