போதைப் பொருளைத் தடுக்க படையினர்.
கொழும்பு மற்றும் அதையண்டிய பிரதேசங்களில் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த படையினர் பயன் படுத்தப்படுவர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு இவர்கள் உதவுவர். கொழும்பிலும் அண்டிய பிரதேசங்களிலும் கடந்த மாதத்தில் பல இடங்களில் பெருமளவு ஹெரோயின் போதைப் பொருளைக் கண்டு பிடிப்பதற்குப் படையினர் பெரிதும் உதவியுள்ளனர்.
0 comments :
Post a Comment