கூட்டமைப்பு யுத்தத்தால் பெற முடியாததை அமைதியில் பெற முயல்கிறதாம்
பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் அண்மையில் மட்டக்களப்பில் ஆற்றிய உரைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை என்று சம்பந்தன் மட்டக்களப்பில் நடைபெற்ற மாநாட்டின்போது தெரிவித்திருந்தார். இந்த உரை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதென அமரசேகர சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர் யுத்தத்தினால் பெற முடியாதவற்றை அமைதிச் சூழலில் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்வதாக தெரிவித்தார். சம்பந்தனின் கூற்றுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சபாநாயகருக்கும் முறைப்பாடு செய்ய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment