Tuesday, June 5, 2012

எலிசபத் மகாராணியின் வைர விழா கொண்டாட்டங் களில் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய இரண்டாவது எலிசபத் மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் பூர்த்தியையொட்டிய வைர விழா கொண்டாட்டங்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளதுடன் பக்கிங்ஹம் மாளிகையில் விசேட வரவேற்பு விழா மற்றும் கலை கலாசார இசை நிகழ்ச்சி உட்பட சென் போல் வணக்கஸ்தலத்தில் இடம்பெற்ற இறை ஆராதனையிலும் கலந்து கொண்டுள்ளதுடன் பொதுநலவாய சபையின் பொது செயலாளர் கமலேஷ் ஷர்மாவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மதிய போசன விருந்துபசாரத்திலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் லண்டன் நகர மற்றும் பொதுநலவாய சபையின் வர்த்தக சபை கூட்டாக இணைந்து, ஒழுங்கு செய்துள்ள பொதுநலவாய சபையின் ஒன்றியத்திலும், ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.அதைதொடர்ந்து, வத்திக்கானுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியர்,அங்கு பரிசுத்த பாப்பரசரை சந்திக்கவுள்ளனர்.

அத்துடன் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையகத்தில், இலங்கை தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வெசாக் விழாவிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

1 comment:

  1. It's really proud to hear that Srilanka's tea was served to the guests at the Westminister hall after lunch today ,in addition to our president's visit.

    ReplyDelete