சகோதரனின் மனைவியை கொடுமைப்படுத்திய நாத்தனாருக்கு அமெரிக்காவில் சிறை
சகோதரனின் மனைவியைக் கொடுமைப் படுத்திய நாத்தனாருக்கு,அமெரிக்காவில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராக்லேண்ட் பகுதியில் வசித்துவரும் 32 வயதுடைய ரஜனி ஜகோடா என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
ரஜனி ஜகோடாவின் சகோதரருக்கு கடந்த 2008ல் திருமணமானது. திருமணம் முடிந்தவுடன் தனது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அவரது தாயார் மற்றும் சகோதரி ரஜனி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்
அமெரிக்கா அழைத்து வரப்பட்ட சகோதரனின் மனைவியை, ரஜனி பல்வேறு கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். மாமியார் பர்வீனும், நாத்தனார் ரஜனியும் சேர்ந்து விஷாலின் மனைவிக்கு சூடு வைத்துள்ளனர். 24 மணி நேரமும் வேலை வாங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ராக்லேண்ட் பொலீசார் வழக்கு பதிவு செய்து, ரஜனியை கைது செய்தனர். சகோதரன் மனைவியை அடிமைபோல நடத்திய ரஜனிக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் மாமியார் பர்வீனுக்கு அடுத்த மாதம் 24ம்தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. மனைவியைக் கடித்துக் காயப் படுத்திய குற்றத்துக்காக விஷாலுக்கு கடந்த மாதம் நன்னடத்தை பிணை வழங்கப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment