பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கெம்ரூன் தமது வருத்தத்தினை தெரிவித்துள்ளார் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாசியரியர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
42 வருட அரசியல் வாழ்வில் இதுபோன்ற எதிர்ப்புப் போராட்டங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் புதிய அனுபவம் அல்ல என்று டேவிட் கமரூனிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் லலித் வீரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருந்த போது ஏழு பிரதான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் கொமன்வெல்த் பொருளாதார மன்ற உரை தவிர்ந்த ஏனையவை நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முறையாக இடம்பெற்றதாகவும், ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் இலங்கைக்கு வெற்றியை அளித்துள்ளது எனவும் லலித் வீரதுங்க அங்கு மேலும் குறிப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment